கேனில் பெட்ரோல், டீசல் விற்க தடை
கேனில் பெட்ரோல், டீசல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
திருவெறும்பூர்:
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் எதிரொலியாக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன், பாட்டிலில் பெட்ரோல், டீசல் விற்க போலீசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருச்சி மாவட்ட பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேனில் பெட்ரோல், டீசல் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருவெறும்பூரில் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரசின் சுற்றறிக்கையை அங்குள்ள ஊழியர்களிடம் போலீசார் வழங்கினர். மேலும் பெட்ரோல், டீசல் போட வந்த வாடிக்கையாளர்களிடமும் இது குறித்து போலீசார் அறிவுறுத்தினர்.
இந்த திடீர் உத்தரவு தெரியாமல் சிலர் கேனில் பெட்ரோல், டீசல் நிரப்ப வந்தனர். அவர்களுக்கு உத்தரவு குறித்து தெரிவித்து, கேனில் பெட்ரோல் வழங்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
Related Tags :
Next Story