ரூ.9 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனை செய்ய தடை


ரூ.9 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனை செய்ய தடை
x
தினத்தந்தி 30 Sept 2022 12:15 AM IST (Updated: 30 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனை செய்ய விதை ஆய்வு துணை இயக்குனர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான விதைகள் விற்பனை செய்ய விதை ஆய்வு துணை இயக்குனர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அதிகாரிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் தஞ்சாவூர் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் விநாயகமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். இதில் மயிலாடுதுறை, செம்பனார்கோவில், மங்கைநல்லூர், குத்தாலம் பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.விதை சட்டப்படி விதைகள் விற்பனை செய்ய வழங்கப்பட்ட விதை உரிமங்கள், சம்பா பருவ விதைகள் இருப்பு, கொள்முதல் செய்யப்பட்ட விதைகளின் இன்வாய்ஸ், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீதுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.

ரூ.9லட்சம் விதைகள் விற்க தடை

சட்ட விதிமுறைகளை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.9.10 லட்சம் மதிப்புள்ள 18.46 டன் விதைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. விவசாயிகள் உரிமம் பெற்ற விதைவிற்பனையாளர்களிடம் ரசீது பெற்று விதைகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். உரிமம் பெறாமல் விதை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.இந்த ஆய்வின் போது நாகை விதை ஆய்வு துணை இயக்குனர் தேவேந்திரன், விதை ஆய்வாளர்கள் பாலையன், நவீன்சேவியர் மற்றும் சத்யா ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story