சான்று பெறாத காய்கறி விதைகள் விற்பனைக்கு தடை


சான்று பெறாத காய்கறி விதைகள் விற்பனைக்கு தடை
x

சான்று பெறாத 3 வகையான காய்கறி விதைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

நெல்லை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் தலைமையில் விதை ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், ஜெயசுதா, விஜயலட்சுமி, சண்முகையா ஆகியோர் மானூர், ரெட்டியார்பட்டி, அத்தியூத்து, பாவூர்சத்திரம், கடையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் நாற்று பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தனியார் காய்கறி நாற்று விற்பனை நிலையங்களில் விதை கொள்முதல் பட்டியல், சான்று, இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல் உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர். பதிவு சான்று பெறாத ரூ.43 ஆயிரத்து 740 மதிப்புள்ள 3 வகையான காய்கறி விதைகளை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பு பதிவேடு மற்றும் விற்பனை பட்டியல் ஆவணங்கள் முறையாக பராமரிக்க பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. காய்கறி விதைகள் வாங்க வரும் விவசாயிகளுக்கு, விற்பனை பட்டியலில் பயிர் ரகம், குவியல் எண், விவசாயி பெயர், முகவரி, கையொப்பமிட்டு வழங்க வேண்டும். பதிவு சான்று பெற்ற விதைகளையே விவசாயிகள் வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த தகவலை விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் தெரிவித்துள்ளார்.


Next Story