நீர் ஆதாரத்தை பாதிக்கும் மணல் குவாரிகளை தடைசெய்ய வேண்டும்


நீர் ஆதாரத்தை பாதிக்கும் மணல் குவாரிகளை தடைசெய்ய வேண்டும்
x

நீர் ஆதாரத்தை பாதிக்கும் மணல் குவாரிகளை தடைசெய்ய வேண்டும் என வன்னியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்ட வன்னியர் சங்க கூட்டம் ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, பா.ம.க. ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எம்.கே.முரளி தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளர் நல்லூர் எஸ்.பி.சண்முகம், வக்கீல் ஜானகிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் அ.ம.கிருஷ்ணன் வரவேற்றார். கூட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, கிழக்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சரவணன், இளைஞர் சங்க மாவட்ட செயலாளர் பகவான் கார்த்தி, மாவட்ட அமைப்பு செயலாளர் கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஒருங்கிணைந்த ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் வன்னியர் சங்க கொடி ஏற்றுவது, நீர் ஆதாரத்தை பாதிக்கும் மணல் குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வாலாஜா நகர செயலாளர் ஞானசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் டாக்டர் சுப்பிரமணி, பொதுக்குழு உறுப்பினர் மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் கஜேந்திரன் நன்றி கூறினார்.


Next Story