சீர்காழி அருகே பள்ளி நேரங்களில் மணல் லாரிகள் செல்ல தடை


சீர்காழி அருகே பள்ளி நேரங்களில் மணல் லாரிகள் செல்ல தடை
x

சீர்காழி அருகே பள்ளி நேரங்களில் மணல் லாரிகள் செல்ல தடை விதித்து தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

மயிலாடுதுறை

சீர்காழி;

சீர்காழி அருகே பள்ளி நேரங்களில் மணல் லாரிகள் செல்ல தடை விதித்து தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சாலை மறியல் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் போலீஸ் சரகத்தில் கொள்ளிடம் ஆற்றில் வடரெங்கம் கிராமத்தில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த மணல் குவாரிக்கு தினமும் ஏராளமான லாரிகள், டிராக்டர்கள் வந்து செல்கின்றன.இதனால் சாலைகள் சேதம் அடைந்து பள்ளி நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், ஆற்றங்கரையில் போக்குவரத்தை தடை செய்ய கோரியும் சாலை மறியல் நடத்தப்படும் என அப்பகுதி மக்கள் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

பள்ளி நேரங்களில்...

கூட்டத்துக்கு தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருண்மொழி, சப் இன்ஸ்பெக்டர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வடரெங்கம் கிராமத்தில் செயல்படும் மணல் குவாரியில் லாரிகள், டிராக்டர்களுக்கும் வாரத்திற்கு 6 நாட்கள் அனுமதி வழங்குவது, பள்ளி செல்லும் நேரங்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காலை மற்றும் மாலை இரு நேரங்களில் லாரிகள் செல்வதை ஒழுங்குபடுத்த வேண்டும்.தினமும் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையிலான பள்ளி நேரத்தில் லாரிகளை இயக்கக் கூடாது. பழுதடைந்து சாலையை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஊர் பொதுமக்கள், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story