வாடகை நிலுவைத்தொகையை காரணம் காட்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடையை காலி செய்ய தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வாடகை நிலுவைத்தொகையை காரணம் காட்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடையை காலி செய்ய தடை - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

வாடகை நிலுவைத்தொகையை காரணம் காட்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடையை காலி செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


வாடகை நிலுவைத்தொகையை காரணம் காட்டி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடையை காலி செய்ய தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

வாடகை

மத்திய அரசுக்கு சொந்தமான கைத்தறி துணிகள் மற்றும் பொருட்கள் விற்பனை நிலையம் சார்பில் அதன் மேலாளர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கடையில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 40 ஆண்டுகளாக வாடகைக்கு கடை நடத்தி வருகிறோம். 2013-ம் ஆண்டில் வாடகை உயர்வை அறிவித்தனர்.

இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கடையை காலி செய்யும்படி அறநிலையத்துறை கமிஷனரிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நோட்டீசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

தடை விதிப்பு

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு நிறுவனம் சார்பில், வாடகை பாக்கித்தொகை ரூ.14 லட்சத்து 54 ஆயிரத்துக்கான வரைவோலை வழங்கப்பட்டது. அந்த வரைவோலையை கோவில் நிர்வாகம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

ஆனால் மொத்த வாடகை பாக்கித்தொகை ரூ.37 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த வரைவோலையை பெற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் ஒருவாரத்தில் ரூ.5 லட்சத்தை செலுத்த வேண்டும். கடையை காலி செய்யும் நோட்டீசுக்கு தடைவிதிக்கப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.


Next Story