தொண்டி பேரூராட்சியில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் தடை


தொண்டி பேரூராட்சியில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் தடை
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி பேரூராட்சியில் 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் தடை செய்யப்படுகிறது.

ராமநாதபுரம்

தொண்டி,

தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் வினியோகம் செய்யப்பட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் பழுதடைந்து உள்ளது. எனவே குடிநீர் குழாய்கள் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) மற்றும் நாளை(வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு தினங்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும் என பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story