பலத்த காற்றால் வாழைகளில் இலைகள் கிழிந்து நாசம்


பலத்த காற்றால் வாழைகளில் இலைகள் கிழிந்து நாசம்
x
தினத்தந்தி 23 July 2023 2:30 AM IST (Updated: 23 July 2023 5:22 PM IST)
t-max-icont-min-icon

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் பலத்த காற்றால் வாழைகளில் இலைகள் கிழிந்து நாசமானது.

தேனி

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் முல்லைப்பெரியாறு பாசனத்தின் மூலம் நெல், கரும்பு, திராட்சை ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக வாழை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக சின்னமனூர், கோட்டூர், சீலையம்பட்டி, குச்சனூர், கூழையனூர், பாலார்பட்டி, உப்புக்கோட்டை ஆகிய பகுதிகளில் திசு வாழை, கற்பூரவள்ளி, நாலிபூவன், நாட்டுவாழை, வயல்காட்டு பழம், ரஸ்தாலி உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளும் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் இருந்து வாழைத்தார்கள் மட்டுமின்றி, வாழை இலைகளும் வெளியூருக்கு அனுப்பப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த ஒருமாத காலமாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் வாழைகளில் இலைகள் கிழிந்து நாசமாகி வருகிறது. அதேபோல் இலைகள் முறிந்து விழுகின்றன. விளைச்சல் அடைந்து தார் விடும் நிலையில் உள்ள வாழை மரங்கள் காற்றால் பாதிக்கப்படுவதால், விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் வாழைகள் சாய்ந்துவிட்டன என்று விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story