வாழைத்தார் விலை வீழ்ச்சி


வாழைத்தார் விலை வீழ்ச்சி
x

வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

கரூர்

நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, திருக்காடுதுறை, நத்தமேடு, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர். வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் வியாபாரிகள் வாழைத் தோப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கும், ரஸ்தாளி ரூ.350-க்கும், பச்சநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.250-க்கும் வாங்கிச் சென்றனர். திருமண முகூர்த்தங்கள், கோவில் விசேஷங்கள் இல்லாததால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story