வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்தது.

கரூர்

வாழை சாகுபடி

கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், சேமங்கி, புங்கோடை, முத்தனூர், குளத்துப்பாளையம், பேச்சிப்பாறை, கோம்புப்பாளையம், நத்தமேட்டுப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய்புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

வாழைத்தார் நன்றாக விளைந்தவுடன் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த வாழைத்தார்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர்.

விலை வீழ்ச்சி

இந்தநிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், பச்சநாடன் ரூ.300-க்கும், கற்பூரவல்லி ரூ.350-க்கும், ரஸ்தாளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சநாடன் ரூ.250-க்கும், கற்பூரவல்லி ரூ.300-க்கும், ரஸ்தாளி 250-க்கும், மொந்தன் ரூ.250-க்கும் விற்பனையானது.

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story