வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்தது.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல், மரவபாளையம், சேமங்கி, முத்தனூர், கோம்புப்பாளையம், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வாழையை அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் வாழைத்தார்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும் அருகாமையில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.350-க்கும், ரஸ்தாலி ரூ.320-க்கும், பச்சைநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது.

நேற்று பூவன் வாழைத்தார் ரூ.300-க்கும், ரஸ்தாலி ரூ.200-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.200-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பால் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story