தொடர்மழை எதிரொலியாக நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி


தொடர்மழை எதிரொலியாக நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி
x

தொடர்மழை எதிரொலியாக நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கரூர்

வாழைத்தார்கள் விற்பனை

கரூர் மாவட்டம், நொய்யல், மரவபாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, கோம்புப்பாளையம், நத்தமேடு, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பூவன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர். வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர். அதேபோல் வியாபாரிகள் வாழைத் தோப்புகளிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர்.. வாழைத்தார்களை நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

விலைவீழ்ச்சி

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாளி ரூ.450-க்கும், பச்சநாடன் ரூ.300-க்கும், கற்பூரவள்ளி ரூ.400-க்கும், மொந்தன் ரூ.550-க்கும் விற்பனையானது. இந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.200-க்கும், ரஸ்தாளி ரூ.220-க்கும், பச்சநாடன் ரூ.180-க்கும், கற்பூரவள்ளி ரூ.200-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. வரத்து அதிகரிப்பாலும், தொடர் மழையின் காரணமாகவும் வாழைத்தார் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story