வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு


வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வு
x

வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பல்வேறு வாழைகள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.250-க்கும், ரஸ்தாலி ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.250-க்கும், மொந்தன் ரூ.300-க்கும் விற்பனையானது. நேற்று பூவன் வாழைத்தார் ரூ.350-க்கும், ரஸ்தாலி ரூ.300-க்கும், பச்சைநாடன் ரூ.250-க்கும், கற்பூரவள்ளி ரூ.300-க்கும், மொந்தன் ரூ.500-க்கும் விற்பனையானது. வரத்து குறைவால் வாழைத்தார் விலை உயர்வடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story