வாழை மரங்கள் சாய்ந்தன


வாழை மரங்கள் சாய்ந்தன
x

காரியாபட்டி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தததால் 4 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தததால் 4 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழை மரங்கள் சாய்ந்தன.

சூறாவளி காற்று

காரியாபட்டி தாலுகா பகுதியில் 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல், பருத்தி, கடலை, எள், வாழை, பயறு வகைகள், கரும்பு ஆகியவற்றை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்தநிலையில் காரியாபட்டி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. காரியாபட்டி அருகே நாசர் புளியங்குளம் கிராமத்தில் ரவி என்ற விவசாயி 4 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையினால் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை விவசாயம் முற்றிலும் சாய்ந்து சேதமானது.

சாய்ந்தன

இதுகுறித்து விவசாயி ரவி கூறுகையில், கடந்த சில நாட்களாக காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் 2 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வாழை முற்றிலும் சாய்ந்தது. இதனால் கஷ்டப்பட்டு சாகுபடி செய்த வாழையை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. கடன் வாங்கி சாகுபடி செய்த பணத்தையும் எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த வாழையை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story