வேங்கைவயல் வழக்கு; விசாரணை தள்ளிவைப்பு


வேங்கைவயல் வழக்கு; விசாரணை தள்ளிவைப்பு
x

வேங்கைவயல் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கழிவு நீர் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றவாளிகளை அடையாளும் காணும் வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதில் அறிவியல் ரீதியாக தடயங்களுக்காக அப்பகுதியை சேர்ந்தவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. இந்த விசாரணையை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தள்ளி வைக்கப்பட்டது.

1 More update

Next Story