அந்தமானில் மோசமான வானிலையால் சென்னையில் தரை இறங்கிய பெங்களூர் விமானம்


அந்தமானில் மோசமான வானிலையால் சென்னையில் தரை இறங்கிய பெங்களூர் விமானம்
x

அந்தமான் சென்ற விமானம் சென்னையில் தரை இறங்கியதற்கு பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னை

ஆலந்தூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து அந்தமானுக்கு 142 பயணிகளுடன் விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அந்தமானை நெருங்கியபோது, அங்கு மோசமான வானிலை நிலவியது. பலத்த சூறை காற்றும் வீசியது.

இதனால் விமானம் அந்தமானில் தரை இறங்க முடியவில்லை. மேலும் அந்த விமானம் மீண்டும் பெங்களூரு சென்றடைவதற்கு போதுமான எரிபொருள் இல்லை என்பதால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் வந்து தரைஇறங்கியது. பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் அமா்ந்திருந்தனா்.

அந்த விமானத்துக்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அதற்குள் மாலை ஆகிவிட்டதால் அந்தமானில் தரை காற்று வீசும் என்பதால் மீண்டும் அங்கு செல்ல முடியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த 142 பயணிகளும், தங்களை அந்தமான் அழைத்து செல்லுங்கள் அல்லது பெங்களூருவில் கொண்டுபோய் விடுங்கள் என்று கூறி சென்னையில் தரை இறங்கியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த விமானம் பெங்களூரு புறப்பட்டு சென்றது.

1 More update

Related Tags :
Next Story