கஞ்சா வழக்கில் கைதான 35 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்


கஞ்சா வழக்கில் கைதான 35 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்
x

கோவை மாநகரில் கஞ்சா வழக்கில் கைதான 35 பேரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர்

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாநகரில் கஞ்சா வழக்கில் கைதான 35 பேரின் வங்கி கணக்குகளை போலீசார் முடக்கினர்.

கஞ்சா விற்பனை

கோவை மாநகரில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கண்ட றிந்து கைது செய்யும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் தீவிர மாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோவை மாநகரில் ஜனவரி மாதம் முதல் கடந்த 19-ந் தேதி வரை கஞ்சா மற்றும் பிற போதை பொருட்கள் விற்றவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

வங்கி கணக்குகள் முடக்கம்

அதன்படி கோவை தெற்கு காவல் சரகத்தில் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக 141 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களின் 28 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

கோவை வடக்கு காவல் சரகத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 43 பேர் கைது செய்யப்பட் டனர். இதில் கைதானவர்கள் தொடர்புடைய 12 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

கோவை மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பாக மொத்தம் 120 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு உள்ளது. இதில் 184 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதில் 35 பேர்களின் 40 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.

மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story