வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x

காரமடை அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக முகமூடி ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

கோயம்புத்தூர்

காரமடை

காரமடை அருகே வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இது தொடர்பாக முகமூடி ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஏ.டி.எம். எந்திரம் உடைப்பு

கோவை மாவட்டம் காரமடை அருகே வெள்ளியங்காடு செல்லும் நெடுஞ்சாலையில் மருதூரில் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

இங்கு நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் புகுந்தார். அவர் திடீரென்று ஏ.டி.எம். எந்திரத் தை உடைத்து அதற்குள் இருந்த பணத்தை திருட முயன்றார். ஆனால் அவரால் அந்த எந்திரத்தை உடைக்க முடிய வில்லை.

இதற்கிடையே அந்த வழியாக ரோட்டில் சென்றவர்கள், ஏ.டி. எம். மையத்திற்குள் மர்ம நபர் ஒருவர் இருப்பதை பார்த்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றவர்கள், எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

முகமூடி ஆசாமிக்கு வலைவீச்சு

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகம், சப் -இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, சுல்தான் இப்ராகிம் ஆகியோர் தலைமையில் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், ஏ.டி.எம். மையத்திற்குள் மர்ம நபர் புகுந்து எந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயலும் காட்சி பதிவாகி இருந்தது.

அதன் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story