வங்கி ஊழியரிடம் 10 பவுன் நகை பறிப்பு


வங்கி ஊழியரிடம் 10 பவுன் நகை பறிப்பு
x

பொற்றையடியில் வங்கி ஊழியரிடம் 10 பவுன் நகை பறிப்பு

கன்னியாகுமரி

தென்தாமரைகுளம்,

ெநல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் சுரேஷ்குமார் (வயது 38). இவர், கன்னியாகுமரி மத்திய கூட்டுறவு வங்கியில் காசாளராக பணியாற்றி வருகிறார். இதற்காக சுரேஷ்குமார் பொற்றையில் வாடகை வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சுரேஷ்குமார் பொற்றையடி அம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பொற்றையடியை சேர்ந்த மகாராஜன், கணபதி, தியாகராஜன் ஆகிய 3 பேரும் சேர்ந்து சுரேஷ்குமாரை வழிமறித்து தகாத வார்தையால் பேசி கம்பி, கற்களால் தாக்கினர். பின்னர், அவர் அணிந்திருந்த 9 பவுன் தங்கச்சங்கிலி, 1 பவுன் மோதிரம், செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த சுரேஷ்குமார் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சுரேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதி, தியாகராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். தலைமறைவான மகாராஜனை போலீாசார் தேடி வருகிறார்கள்.


Next Story