வங்கி அதிகாரி தற்கொலை


வங்கி அதிகாரி தற்கொலை
x

பணகுடியில் வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

பணகுடி:

காவல்கிணறு இஸ்ரோ மையம் அருகே நான்கு வழிச்சாலை ஓரம் நேற்று மதியம் ஒரு கார் மாலை வரை நின்றிருந்தது. தகவல் அறிந்த பணகுடி போலீசார் விரைந்து கார் கதவை திறந்தனர். உள்ளே ஒரு ஆண் விஷம் குடித்து இறந்து கிடந்தார். விசாரணையில் நாகர்கோவிலை சேர்ந்த ஏசுரத்தினம் மகன் பெனிடோ (வயது 45) என்பதும், இவர் சேலம் மாவட்டம் அஸ்தமனபட்டியில் தனியார் வங்கி மேலாளராக பணியாற்றியதும் தெரிந்தது. இன்ஸ்பெக்டர் அஜீகுமார் வழக்குப்பதிவு செய்து பெனிடோ உடலை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.


Next Story