ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கி - அபராதம் விதித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம்
ரெயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த வங்கிக்கு, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திருவாரூர்,
ரெயில்வே ஊழியரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்த பொதுத்துறை வங்கிக்கு, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திருவாரூர் விஜயபுரம் பகுதியை சேர்ந்தவர், ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் சுப்பிரமணியன். இவர் தனது நண்பர் பெற்ற கடனுக்கு ஜாமின் கையெழுத்து போட்டதன் காரணமாக, இவரது ஓய்வூதியத்தை எடுக்க முடியாமல் வங்கி நிறுத்தி வைத்துள்ளது.
இது தொடர்பாக சுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில், நுகர்வோர் குறைதீர் ஆணையம் வங்கிக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story