பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு


பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு; திரளான பக்தர்கள் பங்கேற்பு
x

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

பண்ணாரி மாரியம்மன்

சத்தியமங்கலம் அருகே பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த மாதம் 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா 4-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தங்கத்தேர்

நேற்று மாலை கோவில் சார்பில் தங்கத்தேர் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மின் விளக்குகளால் தங்கத்தேர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த தங்கத்தேரில் பண்ணாரி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. இதில் கோவில் செயல் அலுவலர் மேனகா, பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், மகேந்திரன், கோவில் பொறியாளர் பொன்னுசாமி, மேலாளர் தமிழ்ச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டு தங்கத்தேரை இழுத்து சென்றனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.


Next Story