பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.11½ கோடி செலவில் ராஜகோபுரம் கட்டும் பணி; காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.11½ கோடி செலவில் ராஜகோபுரம் கட்டும் பணி; காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ரூ.11½ கோடி செலவில் ராஜகோபுரம் கட்டும் பணி; காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறையின் சார்பில் ரூ.11½ கோடி செலவில் 9 நிலை ராஜகோபுரம் கட்டவும், ரூ.1 கோடியே 92 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கவும் அறநிலையத்துறை நிதி ஒதுக்கியது. இதைத்தொடர்ந்து இதற்கான பணியை நேற்று தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பணியை தொடங்கி வைத்தார்.

பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் என்.நல்லசிவம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, கோவில் செயல் அலுவலர் மேனகா, உதவி போலீஸ் சூப்பிரண்டு ஐய்மன் ஜமால், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கே.சி.பி. இளங்கோ, சத்தியமங்கலம் நகராட்சி தலைவர் ஆர்.ஜானகிராமசாமி, அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், செயற்பொறியாளர் செல்வராஜ், சிக்கரசம்பாளையம் ஊராட்சி தலைவர் ஆர்.சுப்பிரமணியன், கோணமூலை ஊராட்சி தலைவர் குமரேசன் என்கிற செந்தில்நாதன் மற்றும் கோவில் பணியாளர்கள், பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Next Story