பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை; பக்தர்கள் செலுத்தி இருந்தனர்


பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை; பக்தர்கள் செலுத்தி இருந்தனர்
x

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடி செலுத்தி இருந்தனர்.

ஈரோடு

சத்தியமங்கலம்

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் விழாவையொட்டி பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடி செலுத்தி இருந்தனர்.

பண்ணாரி மாரியம்மன் கோவில்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பண்டிகை நாட்கள், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் திரளான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு செல்வார்கள். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும். மேலும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்துவாா்கள்.

ரூ.1 கோடி

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் விழா நடந்து. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். விழா முடிவடைந்ததையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள 20 உண்டியல்களை திறந்து காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது.

பண்ணாரி மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சாமிநாதன், பவானி, சத்தியமங்கலம் கோவில்கள் ஆய்வாளர் சிவமணி ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் பரம்பரை அறங்காவலர்கள், வங்கி அலுவலர்கள், தன்னார்வலர்கள், பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதில் ரூ.1 கோடியே 7 லட்சத்து 78 ஆயிரத்து 383-ஐ பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேலும் 423 கிராம் தங்கமும், 1044 கிராம் வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.


Next Story