வித்தியாசமான திருமண பிளக்ஸ் பேனர்
நாமக்கல்
இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் என்றாலே போஸ்டர், பேனர், அழைப்பிதழில் வித்தியாசம் என நவீன முறைகளுக்கு மாறிவிட்டன. ஒவ்வொருவரும் தங்களது பொருளாதார சூழலுக்கு ஏற்ப திருமணங்களை விளம்பரப்படுத்துகின்றனர். இந்தநிலையில் நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே அத்தனூரில் திருமண பேனர் ஒன்று வித்தியாசமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பேனரில், 'இனிமே பொண்டாட்டி கிட்ட அடி வேணுமா... அடி இருக்கு, தலையில் கொட்டு வேணுமா... கொட்டு இருக்கு, வயித்துல குத்து வேணுமா... குத்து இருக்கு, மிதி வேணுமா... அதுவும் இருக்கு. மொத்தத்துல உனக்கு பெரிய ஆப்பு இருக்கு என்றும், ஹாப்பி மேரேஜ் லைப் நண்பா' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த திருமண பிளக்ஸ் பேனர் அங்கு வந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது.
Related Tags :
Next Story