அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் படத்துடன் பேனர்...!
காலையில் கிழித்தெறியப்பட்ட ஓபிஎஸ் படம் - மீண்டும் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,
அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில், அங்கே வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் படங்கள் இருந்த நிலையில், ஓபிஎஸ் படம் கிழிக்கப்பட்டது. இதுகுறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொண்டர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அத்துடன், அதேபோன்ற பேனர் அங்கே உடனே வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் மீண்டும் ஓபிஎஸ் படத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. காலையில் ஓபிஎஸ் படத்துடன் இருந்த பேனர் கிழிக்கப்பட்ட பேனர் சரி செய்யப்படும் என அதிமுக நிர்வாகிகள் கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story