அனுமதியின்றி பேனர்: ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு


அனுமதியின்றி பேனர்: ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு
x

அனுமதியின்றி பேனர் வைத்ததாக ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.



சிவகங்கை,

சிவகங்கையில் அதிமுக சார்பில் நடைபெற்ற முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவிற்காக பல பகுதிகளில் அனுமதியில்லாமல் பேனர் வைத்ததாக அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை அதிமுக நகர செயலாளர் ராஜா, வடக்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன் உட்பட இபிஎஸ் அணியினர் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியின்றி பேனர் வைத்த ஓ.பி.எஸ் தரப்பை சேர்ந்த சேகர் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story