பட்டவைய்யனார் கோவிலில் பால்குடம் எடுக்க தடை


பட்டவைய்யனார் கோவிலில் பால்குடம் எடுக்க தடை
x

பட்டவைய்யனார் கோவிலில் பால்குடம் எடுக்க தடை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலத்தில் பட்டவைய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரு தரப்பினர் இன்று (புதன்கிழமை) பால்குடம் எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த நிலையில் மற்றொரு தரப்பினர் அந்த கோவிலில் பால்குடம் எடுப்பது நடைமுறை கிடையாது என்று கூறி பால்குடம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று ஆலங்குடி தாசில்தார் அலுவலகத்தில் இருதரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை கூட்டம் ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில் நடைபெற்றது. இதில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக் ரஜினி, இன்ஸ்பெக்டர் அழகம்மை, வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ் மற்றும் வருவாய்த்துறையினரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. இதில் எவ்வித முடிவும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மேலும் பால்குடம் எடுக்க வேண்டும் என்று கூறி ஒரு தரப்பினரும், மற்ெறாரு தரப்பினர் பால்குடம் எடுக்க கூடாது என்றும் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதையடுத்து கீரமங்கலம் பட்டவைய்யனார் கோவிலில் இன்று பால்குடம் எடுப்பதற்கு தடை விதித்து ஆலங்குடி தாசில்தார் உத்தரவிட்டார். மேலும் இரு தரப்பினரும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியரிடம் சென்று இந்த பிரச்சினையில் தீர்வு ஏற்படுத்திக் கொள்ள வலியுறுத்தினார்.


Next Story