முனீஸ்வரன் கோவில் ஆலமரத்தில் தீ பிடித்தது


முனீஸ்வரன் கோவில் ஆலமரத்தில் தீ பிடித்தது
x

முனீஸ்வரன் கோவில் ஆலமரத்தில் தீ பிடித்தது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே துளாரங்குறிச்சி கிராமத்தில் முனீஸ்வரன் கோவிலில் உள்ள ஆலமரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் செந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) அழகானந்தம், தயாநிதி, சரவணன், பாலமுருகன், செந்தமிழ் செல்வன், ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story