செட்டியக்காபாளையத்தில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு


செட்டியக்காபாளையத்தில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் தூர்வாரப்படுமா?  விவசாயிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 Sept 2022 12:30 AM IST (Updated: 20 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

செட்டியக்காபாளையத்தில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

நெகமம்

செட்டியக்காபாளையத்தில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளார்கள்.

புதர்மண்டிய வாய்க்கால்

பி.ஏ.பி. அணையிலிருந்து ஆண்டு தோறும் பி.ஏ.பி.வாய்க்கால் மூலம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அதிலிருந்து கிளை வாய்க்கால் மூலம் கடைமடை வரை உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்று வருகிறது.

இந்தநிலையில் நெகமம் அருகே உள்ள செட்டியக்காபாளையத்தில் இருந்து பட்டணம் வழியாக மாசநாயக்கன்புதூர் வரை தண்ணீர் செல்கிறது. இதில் 1000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் பாசனம் பெறுகிறது.

இந்த நிலையில் கிளை வாய்க்கால் முழுவதும் புதர்மண்டி செடிகள் முளைத்து தண்ணீர் செல்லா நிலையில் உள்ளது.

தூர்வார வேண்டும்

தற்போது செட்டியக்காபாளையம் வாய்க்காலில் ஒரு பகுதி தண்ணீர் செல்கிறது. புதர்மண்டி உள்ள வாய்க்காலில் அடுத்த முறை தண்ணீர் வரும். எனவே பி.ஏ.பி. வாய்க்காலில் கடைமடை வரை தண்ணீர் எந்தவித குறைபாடும் இல்லாத அளவிற்கு தண்ணீர் சென்று வர வழிவகை செய்ய வேண்டும். அதனால் வாய்க்காலில் உள்ள புதர்களை அகற்றி தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.


Next Story