சிவகங்கை நகரில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்


சிவகங்கை நகரில் உள்ள மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 23 May 2023 6:45 PM GMT (Updated: 23 May 2023 6:45 PM GMT)

சிவகங்கை நகருக்குள் இருக்கும் மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இந்திய மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை நகருக்குள் இருக்கும் மதுக்கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என இந்திய மாதர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

மாநாடு

இந்திய மாதர் சங்க சிவகங்கை நகர் மற்றும் சிவகங்கை வடக்கு மாநாடு சிவகங்கையில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் குஞ்சரம் காசிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டினை வாழ்த்தி தமிழ்நாடு விவசாய சங்க மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குணசேகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட செயலாளர் கண்ணகி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டி மீனா, மாவட்டத் தலைவர் மஞ்சுளா, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை நகரச் செயலாளர் வக்கீல் மருது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் முருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாதர் சங்க சிவகங்கை நகர தலைவராக குஞ்சரம் காசிநாதன், நகரச் செயலாளராக சாரதா, துணைச் செயலாளராக ராஜாத்தி, பொருளாளராக கோகிலா, வடக்கு ஒன்றிய தலைவராக முனீஸ்வரி, வடக்கு ஒன்றிய செயலாளராக ராஜேஸ்வரி, வடக்கு ஒன்றிய பொருளாளராக இந்திரா காந்தி, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மதுக்கடையை இடமாற்ற வேண்டும்

மாநாட்டின் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, சிவகங்கை பழைய மருத்துவமனை எதிரே நகரின் மையப் பகுதியில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து உள்ளதால் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே அவற்றை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்கை நகருக்குள் உள்ள அனைத்து மதுபான கடைகளையும் நகரை விட்டு வெளியே மாற்றியமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.


Next Story