விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டெருமைகள்


விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டெருமைகள்
x

தண்ணீர், இரை தேடி விளைநிலங்களுக்குள் காட்டெருமைகள் புகுந்து விடுகின்றன.

திண்டுக்கல்

நத்தம் அருகே அழகர்மலை, சிறுமலை, கரந்தலை ஆகிய பகுதிகளில் மூங்கில்பட்டி, பட்டணம்பட்டி, காசம்பட்டி, வத்திபட்டி, லிங்கவாடி, வேம்பரளி, மலையூர், முளையூர், உலுப்பக்குடி, குட்டுப்பட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் விவசாயிகள் மா, தென்னை, சோளம், கம்பு, நிலக்கடலை, பயறு வகைகளை சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது மலைப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் தண்ணீர், இரை தேடி காட்டெருமைகள் விளைநிலங்களுக்குள் படையெடுத்த வண்ணம் உள்ளன. இவை பயிர்களை சேதப்படுத்துவதோடு, விவசாயிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன.

இந்தநிலையில் நேற்று அதிகாலை குட்டுப்பட்டி வனப்பகுதியில் இருந்து இறங்கிய 10-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தன. கூட்டம், கூட்டமாக வருகிற காட்டெருமைகளை விரட்டுவது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுகுறித்து குட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி பழனியப்பன் (வயது 45) கூறுகையில், நாளுக்குநாள் காட்டெருமைகளின் தொல்லை அதிகரித்து வருகிறது. விளைநிலங்களுக்குள் காட்டெருமைகள் புகுவதை தடுக்க, ஆங்காங்கே வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் வைக்க வேண்டும் என்றார்.


Next Story