பர்கூர் மலைவாழ் மக்களிடம் மாநில பா.ஜ.க. தலைவர் குறைகள் கேட்டார்
பர்கூர் மலைவாழ் மக்களிடம் மாநில பா.ஜ.க. தலைவர் குறைகள் கேட்டார்.
ஈரோடு
அந்தியூர்
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை மலைக்கிராமம் உள்ளது. இந்த மலைக்கிராமத்துக்கு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சென்றார். பின்னர் அங்குள்ள மலைவாழ் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அங்குள்ள மலைவாழ் மக்கள் தங்களுடைய வீட்டில் மதிய உணவு சாப்பிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அங்குள்ள மலைவாழ் மக்களின் வீட்டில் தரையில் உட்கார்ந்து களி மற்றும் கீரை குழம்புடன் உணவு சாப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் வக்கீல் கலைவாணி விஜயகுமார் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story