கூர்க்கா மீது சரமாரி தாக்குதல்


கூர்க்கா மீது சரமாரி தாக்குதல்
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரையில் கூர்க்கா மீது சரமாரி தாக்குதல் நடந்தது. இது ெதாடர்பாக 6 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரை மேல் தெரு பகுதியில் கூர்க்கா பணியில் நேபாள நாட்டை சேர்ந்த நரேன் குமார் சஞ்சேல் (வயது 43) ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் கண்ணாடி வாப்பா தர்கா செல்லும் சாலையில் ரோந்து சென்றுள்ளார். திடீரென்று அங்கு வந்த 6 பேர் கூர்க்கா நரேன்குமார் சஞ்சேல்லை வழிமறித்து மிரட்டி வழிப்பறி செய்ய முயன்றனர். இதில் ஏற்பட்ட தகராறில் கட்டையால் தாக்கியதில் கூர்க்கா மண்டை உடைந்தது. அவர் கூச்சலிட்டதும் அக்கம், பக்கத்தினர் கூர்க்காவை மீட்டு கீழக்கரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

அதன் பேரில் கீழக்கரையை சேர்ந்த சதாம் உசேன் (31), முகம்மது கான் (28), பைசல் கான் (32), முகம்மது ஆதம் (30), ஜாவித் (22), அபுபக்கர் சித்திக் (24) ஆகியோர் மீது கீழக்கரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 6 பேரையும் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story