அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்


அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்
x

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வேலூர்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர், காப்பாளர் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் வேலூரில் நேற்று நடைபெற்றது. முன்னாள் மாநில தலைவர் கங்காதரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கே.வேலு முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் நிசாந்தன் செயலர் அறிக்கையை வாசித்தார்.

மாநில தலைவர் குணசேகரன், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மணிராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். வக்கீல் சக்கரபாணி கோரிக்கைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில், வேலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் உள்ள ஓராசிரியராக இயங்கும் பள்ளிகளை உடனடியாக இரண்டு ஆசிரியர்கள் பள்ளிகளாக மாற்ற ஆவன செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் நல பள்ளிகளை கல்வித்துறையுடன் இணைக்காமல் தனித்தே செயல்பட வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வினை காலதாமதமின்றி நடத்த வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் சுற்றுச்சுவர், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில் சேகர், ராஜசேகர், சாந்திதிருமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story