அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்


அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்
x

அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

நாகப்பட்டினம்

நாகூர் ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என இந்திய ரெயில்வே மேம்பாட்டு குழு தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கோரிக்கை மனு

இந்திய ரெயில்வே மேம்பாட்டு குழு தலைவர் பி.கே. கிருஷ்ணதாஸ் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவினர் நாகூர் ரெயில் நிலையத்திற்கு வந்து பார்வையிட்டனர். அப்போது அந்த குழுவினரிடம் நாகூர்- நாகை ெரயில் உபயோகிப்போர் நலசங்க தலைவர் மோகன், தமிழ்நாடு அரசு சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் தமீம் அன்சாரி சாஹிப், செயலாளர் சித்திக், துணைத்தலைவர் முகமது தம்பி ஆகியோர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

அடிப்படை வசதிகள்

நாகூர் ரெயில் நிலைய முதலாவது நடைமேடை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்ய வேண்டும். சேதமடைந்த ரெயில் நிலைய நடைமேடை மேற்கூரைகளை சீரமைக்க வேண்டும். நாகூர் ரெயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. எனவே அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும். வெளிப்பாளையம் நடைமேடையை சீரமைத்து பயணிகள் அமரும் வசதி செய்து கொடுக்க வேண்டும். நாகூரில் புதிதாக தங்கும் ஓய்வு அறை கட்ட வேண்டும். நாகூர் முதல் தஞ்சை வரை நிலக்கரி துகள்கள் ெரயில்நிலைய மேடைகளில் படிந்துள்ளது. அதை அகற்ற வேண்டும்.

நாகூர்-அஜ்மீர் வாராந்திர ரெயில்

காரைக்கால் - கொல்லம் ெரயிலை அதிகாலையில் திருச்சி, மதுரை வழியாக இயக்க வேண்டும். நாகூர் - அஜ்மீர் வாராந்திர ெரயிலை இயக்க வேண்டும். திருச்சியில் இருந்து காரைக்கால் வரை பாசஞ்சர் ரெயிலை இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட குழுவினர் இதுகுறித்து நடவடிக்கை எடு்க்கப்படும் என உறுதி அளித்தனர்.


Related Tags :
Next Story