கல்லூரிகளுக்கு இடையேயான அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை, கேரள அணிகள் வெற்றி


கல்லூரிகளுக்கு இடையேயான அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை, கேரள அணிகள் வெற்றி
x

தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான அகில இந்திய கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் சென்னை, கேரள அணிகள் வெற்றி பெற்றன

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கல்லூரிகளுக்கு இடையேயான அகில இந்திய கூடைப்பந்து போட்டி நேற்று தொடங்கியது. இதில் சென்னை, கேரள அணிகள் வெற்றி பெற்றன.

கூடைப்பந்து போட்டி

தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் ஜிம்கானா கிளப் இணைந்து, அகில இந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான டி.எம்.பி. கோப்பைக்கான மின்னொளி கூடைப்பந்து போட்டியை தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் நடத்தியது. இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 8 ஆண்கள் அணியும், 6 பெண்கள் அணியும் பங்கேற்று உள்ளன.

இதன் தொடக்க விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார். விழாவில் கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.டி, பிரம்மானந்தம், செயலாளர் பாலமுருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரத்தினராஜ், மற்றும் ஜோபிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சென்னை வெற்றி

தொடர்ந்து பெண்கள் பிரிவில் நடந்த முதல் போட்டியில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் கல்லூரி அணியும், கேரளா செயிண்ட் ஜோசப் கல்லூரி அணியும் விளையாடின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் சென்னை வைஷ்ணவ் கல்லூரி அணி 56-48 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

ஆண்கள் பிரிவில் ஸ்ரீகேரளா வர்மா கல்லூரி அணியும், சென்னை சத்யபாமா பல்கலைக்கழக அணியும் விளையாடின. இதில் கேரளா அணி 63-40 என்ற புள்ளிக்கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது. போட்டிகள் தொடர்ந்து வருகிற 20-ந் தேதி வரை நடக்கிறது.


Next Story