பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி


பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 26 Aug 2023 8:15 PM GMT (Updated: 26 Aug 2023 8:15 PM GMT)

பெரியகுளத்தில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்றுவருகிறது.

தேனி

'இ' குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி பெரியகுளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டிகளை பெரியகுளம் மற்றும் கெங்குவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கோபிநாத், பன்னீர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்று விளையாடின. 19 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பெரியகுளம் பள்ளி அணி வெற்றி பெற்றது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் லட்சுமிபுரம் பள்ளி அணி 41-30 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பெரியகுளம் அரசு ஆண்கள் பள்ளி அணி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சிதம்பரசூரியவேலு தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின.


Next Story