குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தென்காசி
குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. நேற்று காலையில் இருந்தே சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். நேற்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர். மெயின் அருவியில் நேற்று மாலை சுமார் 5 மணிக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளில் அவர்கள் குளித்துச் சென்றனர்.
Related Tags :
Next Story