திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிக்க தடை - போராட்டத்தில் இறங்கிய பக்தர்கள்..!
திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை,
திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கிழக்கு பகுதியில் மலையை சார்ந்து சரவண பொய்கை அமைந்து உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் சுமார் 15 அடி ஆழத்தில் அமைந்து உள்ள இந்த பொய்கையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் முடி காணிக்கை செலுத்துபவர்கள் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், சரவண பொய்கையில் நீர் மாசடைவதாக கூறி துணி துவைக்க, குளிக்க கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் பொய்கைக்குள் சோப்பு, ஷாம்பு மற்றும் மாசுபடக்கூடிய ரசயான பொருட்களை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் சரவண பொய்கையில் குளிக்க, துணி துவைக்க அனுமதிக்க கோரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.