அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 சரக்கு வேன்களில் பேட்டரி திருட்டு
அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 சரக்கு வேன்களில் பேட்டரி திருட்டுபோனது.
மணப்பாறை:
மணப்பாறையில் உள்ள திண்டுக்கல் சாலையில் சரக்கு வேன் வாகன நிறுத்துமிடம் உள்ளது. இங்கு அதிக அளவில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் நேற்று சரக்கு வேன்களின் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் வந்து வாகனங்களை இயக்க முயன்றனர். இதில் 8 வாகனங்களை இயக்க முடியவில்லை. இதனால் வாகனங்களில் பழுது ஏதேனும் ஏற்பட்டுள்ளதா? என்று அவர்கள் பார்த்தபோது, பேட்டரி இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு அங்கு அடுத்தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 சரக்கு வேன்களில் இருந்து பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து மணப்பாறை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதிக அளவிலான வாகனங்கள் செல்லும் நகரின் பிரதான பகுதியில் உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் 8 வாகனங்களில் இருந்த பேட்டரி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.