போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருகிறவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்;போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை


போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருகிறவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும்;போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 18 March 2023 6:46 PM GMT)

போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருகிறவர்களிடம் அன்பாக நடந்து ெகாள்ள வேண்டும் என போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை கூறினார்.

கன்னியாகுமரி

போலீஸ் நிலையங்களில் புகார் கொடுக்க வருகிறவர்களிடம் அன்பாக நடந்து ெகாள்ள வேண்டும் என போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரை கூறினார்.

போலீஸ் நிலையத்தில் ஆய்வு

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கன்னியாகுமரிக்கு வந்தார். இதையொட்டி நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து ெகாள்வதற்காக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு கன்னியாகுமரிக்கு வந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு அவர் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள கோப்புகளை சரிபார்த்தார். பின்னர் சிறப்பாக கோப்புகளை கையாண்ட சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர மூர்த்திக்கு ரூ.5 ஆயிரம் பரிசு அளித்தார்.

தொடர்ந்து கன்னியாகுமரி அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தென் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் மத்தியில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பணமோசடி புகார்கள்

சில மோசடி நிறுவனங்கள் செய்த பண மோசடி குறித்து பொதுமக்கள் புகார் தர மறுக்கின்றனர். ஆனால் பொது மக்களை ஏமாற்றுகிறவர்களை நாம் விடக்கூடாது. போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

போலீஸ் நிலையங்களில் புகார் ெகாடுக்க வருகிறவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். போலீஸ் நிலையங்களுக்கு வரும் வயதான பெண்களை நம் அம்மா போல பார்க்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் நம்மிடம் தான் வருவார்கள். போலீஸ் நிலையத்தை விட்டால் அவர்கள் எங்கு செல்வார்கள்.

உயிர் தியாகம்

கடந்த பல ஆண்டுகளாக பல போலீசார், அதிகாரிகள் பெரிய அளவில் உயிர் தியாகம் செய்து போலீஸ் துறைக்கு நற்பெயர் வாங்கிக் கொடுத்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் தங்களது பிரச்சினைகளை தீர்க்க, போலீசாரை தேடி 9 லட்சத்து 70 ஆயிரம் பேர் வந்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் நாம் நியாயம் வழங்கி உள்ளோம். இதனால் பொதுமக்கள் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 222 மகளிர் போலீஸ் நிலையங்களில் மட்டும் 75 ஆயிரம் பெண்கள் மனு கொடுத்துள்ளனர். அவர்களுக்கான நியாயமும் நாம் பெற்றுக் கொடுத்துள்ளோம். தமிழக காவல்துறைக்கு நல்ல பெயர் வாங்கி கொடுக்க போலீசார் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story