பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்


பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும்
x

போலீஸ் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடக்க வேண்டும் என்று டி.ஐ.ஜி. அறிவுறுத்தினார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள அனைத்து பதிவேடுகளையும் பார்வையிட்டார். வழக்குகளை தாமதப்படுத்தாமல் விரைவாக முடிக்க உத்தரவிட்டார். போலீஸ் நிலையத்திற்கு வரும் பொது மக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசுவேசுவரய்யா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அருள்மொழி, பிச்சாண்டி உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.


Next Story