தலமலை அருகே ரோட்டில் நடமாடிய கரடி


தலமலை அருகே ரோட்டில் நடமாடிய கரடி
x

தலமலை அருகே ரோட்டில் நடமாடிய கரடி

ஈரோடு

தாளவாடி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தலமலை வனச்சரகத்தில் ஏராளமான மான், புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய் போன்ற விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனச்சாலை வழியாக 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அன்றாட தேவைகளுக்காக தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் செல்வது வழக்கம். இந்தநிலையில் நேற்று பகல் நேரத்திலேயே ஒரு கரடி ரோட்டில் நடமாடியது. அந்த வழியாக வாகனங்கள் சென்றவர்கள் கரடியை பார்த்து அச்சம் அடைந்தார்கள். தலமலை வனச்சாலையில் இதுபோல் அடிக்கடி கரடி நடமாடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தார்கள். இதனால் கிராமமக்கள் எச்சரிக்கையுடன் இந்த சாலையில் செல்லவேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளார்கள்.


Related Tags :
Next Story