கரடி அட்டகாசம்
விக்கிரமசிங்கபுரத்தில் கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டது.
திருநெல்வேலி
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் அனவன் குடியிருப்பு பகுதியானது மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இங்கு வாழும் மக்கள் விவசாய தொழிலையே நம்பி உள்ளனர். இவர்கள் தங்களது வயல்களில் கரும்பு, நெல் மற்றும் தென்னை போன்றவைகளை பயிரிடுகின்றனர்.
இந்த நிலையில் பசுக்கிடைவிளையைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 61) என்பவருக்கு சொந்தமான விளைநிலம் அனவன் குடியிருப்பு பகுதியில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு கரடி புகுந்தது. அங்கு மரத்தில் ஏறி பலாப்பழங்களை பறித்து தின்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. மேலும் பலாப்பழங்களை பறித்து போட்டுச் சென்று உள்ளது.
Related Tags :
Next Story