ஆஸ்பத்திரி வளாகத்தில் கரடி நடமாட்டம்


ஆஸ்பத்திரி வளாகத்தில் கரடி நடமாட்டம்
x
தினத்தந்தி 16 July 2023 2:00 AM IST (Updated: 16 July 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

உருளிக்கல் எஸ்டேட்டில் ஆஸ்பத்திரி வளாகத்தில் கரடி நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான ஆஸ்பத்திரி உள்ளது. வனப்பகுதியையொட்டியுள்ள இந்த ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அடிக்கடி கரடி ஒன்று உலா வருகிறது. மேலும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்தை ஒட்டியுள்ள ஆஸ்பத்திரி பணியாளர்கள், டாக்டர்கள் குடியிருப்பு பகுதியிலும் நடமாடி வருகிறது.

இதனால் இரவு பணிக்கு வரும் டாக்டர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். இரவு நேரத்தில் அவசர தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே மானாம்பள்ளி வனச்சரக வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து, கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story