மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் கைது


மது குடிக்க பணம் தராததால்  மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் கைது
x

மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டார்.

தேனி

அடிக்கடி தகராறு

வருசநாடு அருகே வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோமதி (26). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டு ஆகிறது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

மூர்த்தி கடந்த சில மாதங்களாக மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை மது போதையில் இருந்த மூர்த்தி மீண்டும் மது குடிப்பதற்காக கோமதியிடம் பணம் கேட்டார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கைது

அப்போது மூர்த்தி திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோமதியின் இடது பக்க தலை பகுதியில் வெட்டினார். இதில் வலியால் அவர் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். இதையடுத்து மூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் கோமதியை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கோமதியின் தாயார் பேச்சியம்மாள் வருசநாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வருசநாடு பகுதியில் சுற்றித்திரிந்த மூர்த்தியை கைது செய்தனர்.


Next Story