விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி


விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 5:25 PM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தேனி

கடமலைக்குண்டு பகுதியில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளைச்சல் அடையும் தேங்காய்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர் கனமழை பெய்ததால் தற்போது தென்னை மரங்களில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தேங்காய் விலை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை தரத்தை பொறுத்து 1 தேங்காய் ரூ.11 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது ரூ.8 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் விளைச்சல் அதிகரித்து காணப்படுவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் விலை குறையும் பட்சத்தில் நஷ்டம் ஏற்படும். வெளி மாநிலங்களில் இருந்து தேங்காய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதும் விலை குறைவிற்கு காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். எனவே தேங்காய்க்கு அரசு உரிய நிலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story