கவர்னரை கண்டித்து ஒட்டிய சுவரொட்டியை போலீசார் அகற்ற சொன்னதால்துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
கவர்னரை கண்டித்து ஒட்டிய சுரொட்டியை போலீசார் அகற்ற சொன்னதால் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டார்கள்.
சத்தியமங்கலம்
கவர்னரை கண்டித்து ஒட்டிய சுரொட்டியை போலீசார் அகற்ற சொன்னதால் சத்தியமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டார்கள்.
சுவரொட்டிகள்
மாநில உரிமைகளுக்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாகவும், எனவே அவரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும் என வலியுறுத்தியும் 29-ந் தேதி(நாளை) கவர்னர் மாளிகையை முற்றுகையிட போவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டியுள்ளார்கள்.
இந்த சுவரொட்டிகளை உடனடியாக அகற்றக்கோரி தாளவாடி, ஆசனூர், கடம்பூர், சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் போலீஸ் நிலையங்களில் இருந்து அந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளார்கள். மேலும் சுவரொட்டி ஒட்டிய கட்சி நிர்வாகிகள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முற்றுகை
இதை கண்டித்து நேற்று முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சத்தி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு நீலகண்டன் (பொறுப்பு) பேச்சுவார்த்தை நடத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை சமாதானப்படுத்தி கலைந்துபோக வைத்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மோகன்குமார், சக்திவேல், ராஜேந்திரன், ஸ்டாலின் சிவக்குமார், ஜமேஷ் உள்பட ஆண்கள், பெண்கள் என பலர் இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.