மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை


மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 22 July 2023 12:15 AM IST (Updated: 22 July 2023 4:55 PM IST)
t-max-icont-min-icon

மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்

சிவகங்கை

காரைக்குடி

சாக்கோட்டை போலீஸ் சரகம் விளாரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் உடையப்பன் (வயது 38).இவர் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்து வந்தார்.இவரது மனைவி சரண்யா. சம்பவத்தன்று இரவு கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சரண்யா கணவரோடு கோபித்துக் கொண்டு அருகில் உள்ள அவரது நாத்தனார் வீட்டுக்கு சென்று விட்டார். மீண்டும் காலையில் வந்து பார்த்த போது உடையப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story